சென்னை

மிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் 2001 முதல் 2018 வரை காவலில் வைக்கப்பட்ட 1727 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் ஆகிய இருவரும் சித்திரவதை செய்யப்பட்டதால் மருத்துவமனையில் மரணம் அடைந்ததாக வந்த தகவல் நாட்டை உலுக்கி உள்ளது,  இந்த மரணத்தையொட்டி காவல்துறையினருக்கு எதிரான விமர்சனங்கள் வலுத்து வருகின்றன.

இந்த குற்றத்துக்காக காவல்துறையினர் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வேறு தண்டனை ஏதும் அளிக்கப்படுமா என்பது தெரியவில்லை.

இது குறித்த விவரங்களைப் பார்க்கும் போது 2001 முதல் 2018 வரை அகில இந்திய அளவில் 1726 பேர் காவலில் இருக்கும் போது மரணம் அடைந்துள்ளனர்.   இந்த மரணங்களில் தொடர்புடைய பல காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காவலர்களில் பலர் இதற்காகக் கைது செய்யப்பட்ட போதிலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.  அப்படி ஆஜர்படுத்தியவர்களில் 26 பேருக்கு மட்டுமே தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், குஜராத் மற்றும் ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட மரணங்கள் இந்த கால கட்டத்தில் நிகழ்ந்துள்ளன. இந்த மாநிலங்களில் ஒரு காவலருக்குக் கூட தண்டனை அளிக்கப்படவில்லை.

கடந்த 2001 முதல் 2018 வரை காவல் மரணங்கள் தவிர மனித உரிமை மீறல் குற்றங்கள் குறித்து சுமார் 2000க்கும் மேற்பட்ட வழக்குப் பதியப்பட்டுள்ளன.  இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 737 காவல்துறையினரில் 344 பேர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.