சன்ஹவுளி:
பீகாரில் ஆற்றுக்கு நடுவே உள்ள தீவு போன்ற கிராமம் இதுவரை எந்தவித அடிப்படை வசதியின்றி உள்ளது. இதன் காரணமாக இந்த கிராமத்து இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக திருமணமே நடக்கவில்லை.

பீகாரில்  ஓடும்  சாந்தன் ஆற்றுக்கு நடுவே அமைந்திருக்கும் கிரமம் சன்ஹவுளி.  இந்த கிராமத்தை சென்றடைய பழமையான ஒரு சிறிய பாலம் மட்டுமே உள்ளது. இதன் வழியாகத்தான் ஆற்றை கடந்து கிராமத்தை அடைய வேண்டும்.
1noromance
மோசமான நிலையில் இருக்கும் இந்த  பாலத்தை சரிசெய்ய இதுவரை எந்தவொரு அரசியல்வாதியோ, அரசு அதிகாரிகளோ  முன் வரவில்லை. இதன் காரணமாக இந்த கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு திருமண வாழ்க்கை என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்த பழமை வாய்ந்த  பாலமும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கட்டியதாக கூறப்படுகிறது.
பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பாலத்தை கடந்து வர மிகவும் அச்சப்படுவதால் கிராமத்தில் உள்ள பெண்கள் திருமணமே ஆகாமல் காத்திருக்கின்றனர். வேறு எந்த கிராமத்துடனும் இந்த கிராமம் இணையாததால் போக்குவரத்தின்றி தனியாக காட்சியளிக்கிறது.

 
தங்களுக்குப் போக்குவரத்து வசதிகளை செய்து தர வேண்டும் என்று கிராம மக்கள் எத்தனையோ முறை கோரிக்கை வைத்தும் மாநில அரசு எந்தவித  நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.  இந்த கிராமத்தில் திருமணம்  நடைப்பெற்று ஏறக்குறையாக 20 வருடங்கள் ஆகிறதாம். இதனால் இங்கு முதிர்கன்னிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கிராமத்தினர் வருத்தத்துடன் தெரிவித்து உள்ளனர்.