லிஃபோர்னியா

வ்வொருவருக்கும் 8 மணி நேரம் ஆழ்ந்து தூங்கும் போது நமது நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடலில் இருந்து தேவையற்ற பொருட்கள் விலகி உடல் நலம் மேம்படும்.

உலகின் முன்னேறி வரும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில் தற்போதுள்ள சூழ்நிலையில் கைகளைக் கழுவுதல், சுத்திகரிப்பான் பயன்படுத்துதல் போன்றவை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.   நமக்கு இதற்கு முன்பே இது குறித்துத் தெரிந்துள்ள போதிலும் நாம் கவனத்தில் கொள்ளவில்லை.  இதைப் போல் நாம் பலவற்றையும் தெரிந்தும் அதைப் பின்பற்றாமல் இருந்துள்ளோம்.

ஒவ்வொரு நாளும் நாம் தூங்கும் போது நமது உடல் மற்றும் எண்ணங்கள் மெதுவாக இயக்கத்தை நிறுத்துகின்றன.    அப்போது உடலில் உள்ள கெட்ட பொருட்கள் வெளியேறுகின்றன.   எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.   தேய்ந்து போன தசைகள் மீண்டும் உருவாகி தேவையான சுரப்பிக்கள் பணி சரி செய்யப்படுகிறது.   நாம் தூங்கும் போது உடலின் பல பாகங்கள்  தமக்குத் தாமே புத்துணர்ச்சி அளித்துக் கொள்கின்றன.

நவீன வாழ்க்கையில் தூக்கம் என்பதை மீறி நாம் உழைக்கத் தொடங்கி உள்ளோம்.   அதனால் தூக்கம் பல சுகாதார நிகழ்வுகளின் அடிப்படை என்பதை அடியோடு மறந்து விட்டோம்.   உடலுக்கு சமச்சீர் உணவு எவ்வளவு அவசியமோ அதைப் போல் சரியான அளவு தூக்குமும் அவசியம் என்பதை நாம் கருத்தில் கொள்வதில்லை,

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில்  நட த ஒரு ஆய்வில் ஜலதோஷம் போன்ற தொற்றுகள் 7 மணி நேரம் மற்றும் அதற்கு அதிகமாகத் தூங்குவோரை அதிகம் தாக்குவதில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.   ஐந்து மணி நேரத்துக்கும் குறைவாகத் தூங்குவோரில் 50% தொற்றால் பாதிக்கப்படுகையில் 7 மணி நேரத்துக்கு மேல் தூங்குவோரில் 18% மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நம்மால் நன்கு தூங்கினால் வைரஸ் தாக்காது எனச் சொல்ல முடியாத போதிலும் நன்கு தூங்குவோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் வைரஸ் தாக்கம் உண்டாக வாய்ப்பு குறைவு எனக் கூறலாம்.   உண்மையில் மற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போல் சரியான அளவு தூக்கமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகும்.   எனவே சரியான அளவு தூக்கம் அனைவருக்கும் தேவை ஆகும்.

இவ்வாறு தூங்க முக்கியமான மூன்று நடவடிக்கைகளை நாம் கையாள வேண்டும்.

சீக்கிரம் மற்றும் தேவையான அளவு மட்டும் சாப்பிடுதல், :  தாமதமாகச் சாப்பிடுவது மட்டுமின்றி அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டாலும்  அது தூக்கத்துக்கு இடைஞ்சல் தரும்.

மதுவைக் குறைக்கவும் : மது என்பது தூக்க மருந்து இல்லை.  மாறாக அது ஒரு மயக்க மருந்து போன்றதாகும்.  இதனால் எவ்வளவு தூங்கினாலும் ஓய்வு இல்லாத மனநிலை ஏற்படுகிறது.  அது மட்டுமின்றி மது அருந்தி விட்டுத் தூங்குவோரின் இதயத் துடிப்பு 15% அதிகமாக இருக்கும் என்பதால் இதயத்துக்கு வேலைப் பளு அதிகரிக்கும்.

காப்பியை தவிர்த்தல் “ காப்பி என்பது பலரும் விரும்பும் பானம் என்றாலும் அது நம்மை அசந்து தூங்க விடாது.  அத்துடன் அடிக்கடி விழிப்பு வருவதால் தூங்கும் போது நடைபெறும் உள் உடல் இயக்கங்கள் தடைப்படும்.

படுக்கை அறையில் பொழுது போக்கு சாதனங்கள் கூடாது : தற்போதைய பழக்கங்களாகத் தூங்கும் வரை டிவி அல்லது மொபைலை பார்ப்பது பலருக்கும் உள்ளது.  தூங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரம் முன்பு மொபைல் மற்றும் டிவி பார்ப்பதை நிறுத்த வேண்டும்.  இவற்றில் வரும் நீல ஒளி தூக்க நரம்புகளைப் பாதிக்கும்.  அத்துடன் டிவியில் தொடர்ந்து கெட்ட செய்திகளைக் கேட்டாலும் தூக்கம் பாதிப்பு அடையும்.

தூங்கும் அறை குளிர்ச்சியாக இருக்க வேண்டியது மிக முக்கியமாகும்.   குறிப்பாகக் கோடைக்காலங்களில் இது மிக மிக அவசியமாகும்.   அது மட்டுமின்றி சுற்றுச் சூழல் தூங்க ஏதுவாக இருக்க வேண்டும்.  அதற்கேற்றபடி படுக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.   ஒரு சிலர் யோகா அல்லது மூச்சுப் பயிற்சி செய்வார்கள் இதுவும் தூங்க ஏதுவான சுற்றுச் சூழலை அளிக்கும்.

குறிப்பாக ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்லும் நேரம் மாறுபட்டு இருக்கக் கூடாது.  உதாரணமாக இரவு 10 மணிக்குத் தூங்கி 6 மணிக்கு எழும்பும் பழக்கம் மிக நல்லதாகும்.  இந்த நேரத்தை மாற்றாமல் இருப்பது நல்ல தூக்கத்துக்கு உதவும்.