டெல்லி: டாடா குழும வரலாற்றில் முதல்முறையாக, அக்குழு நிறுவனங்களின் உயரதிகாரிகள் 20% ஊதியக் குறைப்பை சந்திக்க உள்ளனர்.
கொரோனா பொருளதார இழப்பு காரணமாக, டாடா குழு இயக்குநர் மற்ற சிசிஓக்கள் இந்த 20 சதவீத ஊதிய இழப்பு என்ற முடிவை எடுக்குகின்றனர். நிறுவனத்தின் வரலாற்றில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கை ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரு அளவுகோலை அமைப்பதை நோக்கமாகக் கொண்டது. வணிக நம்பகத்தன்மையை பராமரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தொழில் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் முதன் கட்டமாக, டி.சி.எஸ் அதன் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபிநாதனுக்கு இழப்பீடு குறைப்பதாக முதலில் அறிவித்தது. டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா கேபிடல், டாடா இன்டர்நேஷனல் மற்றும் வோல்டாஸ் ஆகியவற்றின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் நிர்வாக இயக்குநர்களும் ஊதிய இழப்பை சந்திப்பர் என்று தகவல்கள் கூறுகின்றன.
சரியான தலைமையை உறுதிப்படுத்த நாங்கள் இதுபோன்ற அனைத்து முடிவையும் செய்வோம். ஒரு நிறுவனம் எப்போதுமே ஊழியர்களை வரையில் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்துள்ளது என்று தலைமை நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.