ண்டன்

ழங்கள் மற்றும் காய்கறிகள் அறுவடைக்காகக் கிழக்கு ஐரோப்பியப் பண்ணைத் தொழிலாளர்கள் இங்கிலாந்துக்குத் தனி விமானம் மூலம் வருகின்றனர்,

இங்கிலாந்து நாட்டில் ஏராளமான காய்கறி மற்றும் பழத் தோப்புகள் உள்ளன.  இங்குப் பழங்கள் மற்றும் காய்கறிகள் லட்சக்கணக்கான டன் அளவில் விளைகின்றன.  இவற்றை அறுவடை செய்ய போதுமான தொழிலாளர்கள் இங்கிலாந்தில் இல்லை.  இதற்காகக் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள பண்ணைத் தொழிலாளர்கள் வந்து பணி புரிவது வழக்கமாகும்.

தற்போது ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று மிகவும் அதிகமாக உள்ளது.  இங்கிலாந்து நாட்டில் கொரோனா தொற்றால் சுமார் 98 ,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார்12,800க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.   இதையொட்டி இங்கிலாந்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்து இளவரசர், பிரதமர் உள்ளிட்டோரும் கொரோனாவால் பாதிப்பு அடைந்து சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்துள்ளனர்.  இவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து வந்தவர்களால் கொரோனா தொற்று உண்டானதாகக் கூறப்படுகிறது.  இதையொட்டி வெளிநாட்டினர் இங்கிலாந்து வருவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே அறுவடைக்கு வெளிநாட்டினர் வருவது முழுமையாக நின்று போனதால் லட்சக்கணக்கான டன் அளவில் காய்கறிகளும் பழங்களும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.  உள்ளூர் மக்களை பணிக்கு எடுத்த போதிலும் அவர்களால் அறுவடையை முழுமையாகச் செய்ய முடியவில்லை.  எனவே பண்ணை உரிமையாளர்கள் அரசுக்கு வெளிநாட்டு தொழிலாள்ர்களைஅனுமதிக்க கோரிக்கை விடுத்தனர்.

அதையொட்டி அரசு வெளிநாட்டில் இருந்து பண்ணைத் தொழிலாளர்கள் முழு பரிசோதனைக்குப் பிறகு இங்கிலாந்து அழைத்து வர அனுமதி அளித்துள்ளது.  தற்போது விமான சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதால் அவர்கள்  இந்த மாத இடையில் இருந்து  ஜூன் இறுதிக்குள் ஆறு சிறப்பு விமானங்களில் அழைத்து வரப்பட உள்ளனர்.  இதில் முதல் விமானம் 150 ரோமானிய தொழிலாளர்களுடன் இன்று இங்கிலாந்து வருகிறது.