சினிமா மீதான தன் காதலை சொல்லும் வரலக்ஷ்மி…!

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் சினிமா மீதான தனது காதலை வெளிப்படுத்தும் வகையில் தனது கையில் புதிய டாட்டூ ஒன்றை போட்டுள்ளார்.

கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் போன்ற கொள்கைகள் எதுவுமில்லாமல் , தனக்கு சவாலாக அமையும் அத்தனை கதாபாத்திரங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் வரலக்ஷ்மி. ‘வெல்வெட் நகரம்’, ‘கன்னி ராசி’, ‘நீயா 2’, ‘காட்டேரி’, ‘ராஜபார்வை’, ‘சக்தி’ ‘டேனி’ உள்ளிட்ட பல திரைப்படங்களை தன் கைவசம் வைத்துள்ளார் நடிகை வரலக்ஷ்மி .

இந்நிலையில், சினிமா மீதான தனது காதலை சொல்லும் விதமாகவும், போராளி பெண்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களை ஆதரிக்கும் விதமாகவும் புதிய டாட்டூ ஒன்றைதன கையில் போட்டுள்ளார்.

முகமூடியை டாட்டூ-வாக போட்டுள்ள வரலக்ஷ்மி, போலிகள் நிறைந்த இந்த வாழ்க்கையை எந்த முகமூடியும் இல்லாமல், நமக்கான அமைதியான வாழ்க்கையை வாழுவோம் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.