சென்னை

டுத்த ஆண்டு முதல் தமிழக அரசுப்பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவை ஒரு பாடாமாக கொண்டு வர உள்ளதால் இது குறித்து அரசு கூகுள் , மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது

அடுத்த ஆண்டு (2020) முதல் தமிழக அரசுப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) ஒரு பாடத் திட்டமாகக்  கொண்டுவரத் தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. தனியார் பள்ளிகள் செயற்கை நுண்ணறிவு, பிக் டேட்டா, கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற உயர் தொழில் நுட்பங்களை, தத்தம் மாணவர்களுக்குக் கிடைக்கும் சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது

தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் அது போன்ற வாய்ப்பை உருவாகித் தரவேண்டும் என்று விரும்பியது.  இது வரையில், தமிழக அரசுப் பள்ளிகளில் அவ்வப்போது செயற்கை நுண்ணறிவு குறித்த விழிப்புணர்வு முகாம்  போன்றவை மூலமாக மாணவர்களிடம் கொண்டு சேர்த்திருந்த நிலையில் தற்போது அதைப் பாடத் திட்டமாக மாற்ற உள்ளது.

இதில் முதற்கட்டமாக, ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த பாடத்திட்டம் அமைய விருக்கிறது. மாணவர்களிடம் செயற்கை நுண்ணறிவு  அறிவியலைக் கொண்டு செல்வதற்காகப் பெரிய தொழினுட்ப நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களிடம் தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.