ஈசா முறைகேடுகளுக்கு அமைச்சர் வேலுமணி ஆதரவு!: சுற்றுச்சூழல் ஆர்வலர் குற்றச்சாட்டு

ஜக்கி – வேலுமணி

சா மையத்துக்கு பிரதமர் மோடி, நாளை வர இருக்கும் நிலையில், “சட்டத்துக்கு புறம்பாக காட்டை அழித்து ஆசிரமம் கட்டிவரும் ஜக்கி வாசுதேவின் ஈசா மையத்துக்கு நாட்டின் பிரதமர் வரலாமா” என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது.

இந்த நிலையில், சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர் சிவாவிடம் பேசினோம்.  ஈாசா மையத்தின் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளை பலவருடகாலமாக தொடர்ந்து எதிர்த்து போராடி வருபவர் இவர்.

அவர், “ஈசா மையம் என்பது ஆன்மிகத்தலம் அல்ல.  அது ஒரு பிரமாண்ட ரியல் எஸ்டேட் நிறுவனம் , அவர்களுக்கு நொய்யலாற்றின் நீராதார பகுதியாக விளங்கும் வெள்ளியங்கிரி

மலையடிவாரத்தில் தேவையெல்லாம் பிரமாண்டமான் சொகுசு நகர் ஒன்றை அமைக்கவேண்டும் என்பதுதான். இதன் மூலம் மேலும் பல ஆயிரம் கோடிகளை சம்பாதிக்கலாம் என திட்டமிடுகிறார்கள்.

இதற்க்காகத்தான் இந்த ஆதியோகி நாடகமும் அதற்கு பிரதமர் மோடியை அழைப்பதும்.

தீபக் தியாகி, புனித்நந்த, அமர் அகர்வால், மவுமிதா சவுகாத் சென், வேம்பல்ல வெங்கடசுப்ப ரெட்டி, குமரன் கந்தசாமி, பாரதிவரதராஜன். இவர்களின் பின் புலத்தை பார்த்தோம் என்றால், மோடி இங்கு வருவதில் உங்களுக்கு ஆச்சரியம் இருக்காது.

இன்றைய சூழலில் கோவையில் பிரதான கட்டுமான நிறுவனங்களே தினறுகிறார்கள். ஆனால் ஈசாவின் ன வியாபரம் நிற்கவில்லை. இதுதான் ஆண்மிகத்தினை ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ளும் உத்தி” எந்றவர், ஈசாவின் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் பற்றி விளக்கினார்.

ஆக்கிரமிப்பட்ட பகுதிகளில் ஒன்று..

“. 2015 ஆம் ஆண்டில் கோவை மாவட்ட வன அலுவலர் ஈசா யோக மையம் சட்டத்துக்குப் புறம்பாக கட்டிடங்களை கட்டி வருவதையும் அதன் மீதான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறித்தினார். ஆனால் ஈசா, தனது நடவடிக்கையை நிறுத்தவில்லை.

சிவா

யதையும் காணலாம். அது தவிர ஈசா யோகமையம் அனுமதி கேட்டாலும் கொடுக்க முடியாத அளவிற்கு விதிமுறை மீறல்கள் இருப்பதை அறியலாம். இப்போது இந்திய பிரதமர் வருகிறார்.இனி என்ன கட்டப்போகிறார் என்று தெரியவில்லை

இன்னொரு விசயம்… கோவை வனக்கோட்டம் வாளையாறு அருகே சின்னாம்பதி மலைகிராமத்தில் தொடங்கி சிறுமுகை வரை 625 சதுர கிலோ மீட்டர் நீண்டு உள்ளது. ஏறத்தாழ 90 க.மீ. நீள மலையடிவாரப்பகுதி முழுவதுமாக மிகப்பெரிய நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளன. சிற்றோடைகள் தொடங்கி ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன” என்றார் சிவா.

மேலும அவர் தற்போது சர்ச்சைக்குள்ளாக்கியிருக்கும் ஈசா யோகா மையம் அமைச்சர் வேலுமணியின் தொகுதிக்குள்தான் வருகிறது. ஈசா மையத்துக்கு தேவையானவற்றை இவர்தான் செய்துவருகிறார்.” என்று குற்றம் சாட்டினார் சிவா.

வேலுமணி மீதான குற்றச்சாட்டு குறித்து அவரது விளக்கத்தை அறிய அவரது எண்ணில் தொடர்புகொண்டோம். பல முறை  தொடர்புகொண்டும் நம் அழைப்பு ஏற்கப்படவில்லை.