மருத்துவ விசா பெற பாகிஸ்தான் அரசின் பரிந்துரை அவசியம்!! இந்தியா அறிவிப்பு

டெல்லி:

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆயிரகணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற இந்தியா விசா வழங்க மறுப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியானது. கல்லீரல், இருதயம் தொடர்பான நோய்களுக்கு டெல்லி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் சிகிச்சை பெற மருத்துவ விசா வழங்காமல் இருப்பதால் நோயாளிகள் பாதித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களுக்கு மருத்துவ விசா வழங்குவது சாத்தியமல்ல என்று ஒரு இ ந்திய அதிகாரி தெரிவித்திருந்ததாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து அந்நாட்டில் உள்ள இந்திய தூதர் கவுதம் பம்பாலேவை அழைத்து அந்நாட்டு அதிகாகள் கவலை தெரிவித்தனர். ஆனால், இது இந்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவு விவகாரத் துறை செய்தி தொடர்பாளர் கோபால் பக்லே கூறுகையில்,‘‘வெளியுறவு துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜூக்கு இ.மெயில் மூலமும், சமூக வளை தளம் மூலமும் பாகிஸ்தான் மருத்துவ விசா தொடர்பாக கோரிக்கைகள் பல வந்துள்ளது. மருத்துவ விசா எதுவும் நிறுத்தப்படவில்லை. கடந்த ஆண்டு ஆயிரகணக்கான மருத்துவ விசாக்கள் பாகிஸ்தான் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.’’ என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘இது தொடர்பாக கோரிக்கைகளுக்கு அமைச்சர் பதிலளித்தும், நடவடிக்கையும் எடுத்து வருகிறார். அவர் சமூக வளை தளம் மூலம் வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு ஏற்படும் பிர ச்னைகளை அறிந்து தீர்த்து வருகிறார்.

இவ்வாறு வரும் கோரிக்கைகளின் உண்மை தன்மையை அறிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அந்நாட்டு வெளிநாட்டு விவகாரத் துறையின் பரிந்துரை கடிதத்தை சமர்ப்பிக்க கோரியுள்ளோம். சமூக வளை தளங்களில் வரும் தகவல்களை வைத்து அதன் உண்மை தன்மையை கண்டறிய இயலாது. பரிந்துரை கடிதம் வந்தால் உடனடியாக விசா வழங்கப்படும். ஆனால் இதற்கு பாகிஸ்தான் அரசின் பரிந்துரை அவசியமாகும்’’ ªன்று கோபால் பக்லே தெரிவித்துள்ளார்.