ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் கொண்டு வர இயலாது! மோடி

டில்லி,

ல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசர சட்டம் கொண்டு வர இயலாது என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

இன்று காலை பிரதமரை சந்தித்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு குறித்து அவசர சட்டம் கொண்டு வர வலியுறுத்தினார். மேலும் தமிழகத்தில் நடைபெற்று வரும் இளைஞர்களின் போராட்டம் குறித்தும் விவாதித்தார்.

இதுகுறித்து, பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

ஜல்லிக்கட்டு குறித்த,  தமிழக அரசு நிலைப்பாட்டிற்கு  மத்திய் அரசு ஆதரவு. ஆனால் ஜல்லிக்கட்டு விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதால் அவசர சட்டம் கொண்டு வர இயலாது. ஜல்லிக்கட்டு குறித்து சுப்ரீம் கோர்ட்டே முடிவு செய்யும் என்றும்,

ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.. ஆனால் விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது.

தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஆதரவாக இருக்கும்.. தமிழக முதலமைச்சரை சந்தித்தபின் தனது கருத்தை  மோடி டூவிட்டரில் தெரிவித்துள்ளார்.