கொரோனா தடுப்பு : வட சென்னை ஊரடங்கு பணியில் மாநில சிறப்பு காவல்படை

சென்னை

ட சென்னையில் கொரோனா தடுப்பு ஊரடங்கு பணியில் அரசு மாநில சிறப்பு காவல்படையை நியமித்துள்ளது.

சென்னை நகரில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   இதுவரை சென்னையில் 45,814 பேர் பாதிக்கப்பட்டு 665 பேர் உயிர் இழந்துள்ளனர்.   கடந்த 2 வாரங்களுக்கும் மேலாகச் சென்னை நகரில் தொடர்ந்து தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1000 ஐ தாண்டி வருகிறது.

இதையொட்டி சென்னை மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் ஊரடங்கு விதிகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன.   ஆயினும் பல இடங்களில் மக்கள் ஊரடங்கு விதிகளைப் பின்பற்றுவதில்லை என செய்திகள் வருகின்றன.

வட சென்னை பகுதியில் ஊரடங்கு பணிக்குத் தமிழக அரசு மாநில சிறப்பு காவல்படையை நியமித்துள்ளது.  நேற்று வட சென்னை பகுதியில் இவர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர்.   தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மாநில சிறப்பு காவல்படை நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.