காதலுக்காக ரூ 2,000 கோடி சொத்துக்களை துறந்த காதலி!

தன் காதலைக் காப்பாற்ற, ரூ. 2000 கோடி சொத்துக்களை காதலி நிராகரித்த ஆச்சரிய சம்பவம் மலேசியாவில் நடந்துள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த பெரும் கோடிஸ்வரர் கோ கே பெங். இவர் மலேசியாவில் முன்னணி தொழிலதிபர்களுள் ஒருவர். ஏராளமான நட்சத்திர விடுதிகளை நடத்தி வருகிறார். இவரது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.2000 கோடி! இவரது ஒரே மகள் ஏஞ்சலின் பிரான்சிஸ் கோ. பிரிட்டனில் படிக்கும் போது தனது நண்பரான ஜடிடிஹா என்பவரை காதலித்தார்.

இவர், கரீபியன் தீவுகளைச் சேர்ந்த விஞ்ஞானி. ஏஞ்சலின் தனது காதல் விவகாரத்தை தனது தந்தையிடம் தெரிவிக்க, அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் தந்தை பெங். தனது எதிர்ப்பையும் மீறி காதலனை கரம் பிடித்தால் கோடிக்கணக்கான சொத்துக்களை இழக்க நேரிடும் என்று தந்தை எச்சரித்தார்.

அது குறித்து கவலைப்படாமல், வீட்டைவிட்டு வெளியேறிய ஏஞ்சலின் தனது காதலனை மணம் செய்துகொண்டார். கோடிஸ்வரரின் மகளான ஏஞ்சலின் திருமணம் வெளி எளிமையாக, நண்பர்கள் 30 பேர் முன்னிலையில், பெம்ப்ரோக் கல்லூரி தேவாலயத்தில் நடந்தது.

இது குறித்து ஏஞ்சலின் கூறுகையில், என்னுடைய தந்தையின் பணம், வசதி வாய்ப்புகள் இது எதுவுமே எனக்கு முக்கியமில்லை. அந்த சொத்துக்களை இழந்தது குறித்து எந்த வருத்தமும் இல்லை. நானும் என் காதல் கணவரும் எப்டி சிக்கனமாய் வாழ வேண்டும் கற்றுக்கொண்டிருக்கிறோம்” என்றார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: for love a girl leave 2 thousand crore rupees property, காதலுக்காக ரூ 2000 கோடி சொத்துக்களை துறந்த காதலி
-=-