மதுரை:
துரையில் 11 நாட்கள் கொரோனா சிகிச்சை பெற்ற நோயாளிக்கு 6 லட்ச ரூபாய் கட்டணமாக வசூலித்ததாக தனியார் மருத்துவமனை மீது புகார் எழுந்துள்ளது.


அப்போது நோயாளியிடம் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கொடுக்கப்பட்ட டிஸ்சார்ஜ் பில் நோயாளியின் உறவினர்களை தலைசுற்ற வைத்ததுள்ளது.

கொடுக்கப்பட்ட பில்லில் பதிவு கட்டணமாக 2ஆயிரம் என தொடங்கி அறை வாடகை நாளொன்றுக்கு தலா 5ஆயிரம் வீதம் 12நாட்களுக்கு 60ஆயிரமும், 300 ரூபாய் மதிப்புள்ள பிபிஇ கிட் ஒன்றிக்கு தலா 2ஆயிரம் என 96 கிட் பயன்படுத்தியதாக 1லட்சத்தி 92ஆயிரம் ரூபாயும், இதில் இன்னும் கூடுதலாக இன்வெஸ்டிகேஷன் சார்ஜஸ் என தனியாக 24ஆயிரம் ரூபாயும், மருந்து மாத்திரைகளுக்கான செலவாக 78ஆயிரமும், ஹவுஸ்கீப்பிங்கிற்கு 42ஆயிரம் என ஒட்டுமொத்தமாக 6லட்சத்தி 3 ஆயிரத்தி 500 ரூபாய் வசூல் செய்துள்ளனர்.