பொங்கல் : அரசு பேருந்துகளில் 1.25 லட்சம் டிக்கட்டுகள் முன்பதிவு

சென்னை

மிழக அரசு பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகளில் 1.25 லட்சம் டிக்கட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. வரும் ஜனவரி மாதம் 11 முதல் 14 வரை சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 5163 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதைத் தவிர தினசரி பேருந்துகளும் சேர்ந்து மொத்தம் 14263 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதைப் போல ஜனவரி 17 முதல் 20 வரை சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன

இந்த பேருந்துகளில் பயணம் செய்ய முன்பதிவு தொடங்கியதும் இதுவரை 1,25,808 டிக்கட்டுக்கள் முன்பதிவு செய்யபட்டுள்ளன. அத்துடன் இந்த முன்பதிவின் மூலம் அரசு போக்குவரத்து கழகத்துக்கு டிக்கட் கட்டணமாக ரூ.6,08,82,000 கிடைத்துள்ளது.

இதில் ஜனவரி 9 ஆம் தேதி அன்று மட்டும் 14,551 டிக்கட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம் டிக்கட்டுகள் விற்பனை மூலம் போக்குவரத்துகழகத்துக்கு ரூ. 69.02 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.

கார்ட்டூன் கேலரி