கோடை விடுமுறை…சென்னையில் நாளை முதல் 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்

சென்னை:

கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

 

இது குறித்து போக்குவரத்து கழக செய்திகுறிப்பில், ‘‘நாளை (29ம் தேதி) முதல் ஜூன் 30 வரை செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சனி, ஞாயிறு அன்று சுற்றுலா தலங்களுக்கும், செவ்வாய், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு நாட்களில் திருத்தலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படும்.

அண்ணா சதுக்கம், கோவளம், வண்டலூர், மாமல்லபுரம், திருவேற்காடு, சிறுவாபுரி, பெரியபாளையம் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.