டெல்லி:

ந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம்பெற்று வருகிறது. நேற்று (ஆகஸ்டு 2ந்தேதி) மட்டும் 52,972 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால்,  நேற்றைய தினம்,  உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்திய முதலிடத்தை பிடித்துள்ளது.

இதுவரை உலக அளவில் இந்த கொரோனா வைரஸால், 18,234,936 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 692,794 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 11,444,149 குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனர். உலக அளவில் கொரோனா பாதிப்பில், அமெரிக்கா முதல் இடத்திலும், பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.

இந்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  கடந்த 24 மணி நேரத்தில் இந்த கொரோனா வைரஸால், 52,783 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை 18,03,696 ஆக உயர்ந்துள்ளன. ஒரே நாளில் மட்டும் சுமார் 52,972 வழக்குகளின் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தம் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 5,79,357 ஆகவும், 1,186,203 பேர் குணமடைந்துள்ளதாகவும், 38,135 இறப்புகள் உட்பட மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 18.03 லட்சத்தை தாண்டியுள்ளன

கொரோனா மொத்த பாதிப்புக்களை பொறுத்தவரை, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. உலகளவில், கொரோனா வைரஸ் பாதிப்புகள் 1.80 கோடியை எட்டியுள்ளன. இறப்பு எண்ணிக்கை 6.88 லட்சமாக உயர்ந்துள்ளது. உலகில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் பாதிப்புகள் இந்தியாவில் உள்ளன.

நேற்று ஒரே நாளில் மட்டும் இந்தியாவில் 52,972 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது உலக அளவில் அதிகமான பாதிப்பு என்பது தெரிய வந்துள்ளது.

ஆகஸ்டு 2ந்தேதியான நேற்று இந்தியாவில் மட்டும் 52,972 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.இது 24 சதவிகிதம் ஆகும்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் நேற்று 49,038 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளனர். இது 23 சதவிகிதம் ஆக உள்ளது.

2வது இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் 24,081 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது 11 சதவிகிதம் மட்டுமே.

மற்ற நாடுகளில் சேர்த்து மொத்தம் 42 சதவிகிதம் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுஉள்ளது.

அதேவேளையில் கொரோனா உயிரிழப்புகளில் மெக்சிகோ முதலிடத்தை பிடித்துள்ளது. அங்கு 18 சதவிகித அளவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

பிரேசிலில் 12 சதவிகித உயிரிழப்பு ஏற்பட்டு 2வது இடத்தையும், அமெரிக்காவில் 10 சதவிகித உயிரிழப்பு ஏற்பட்டு 3வது இடத்தையும் பெற்றுள்ளது. மற்ற நாடுகள் அனைத்தும் சேர்த்து 43 சதவிகித உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

 நேற்றைய கொரோனா பாதிப்பில், இந்தியா முதன்முதலாக உலகின் முதலிடத்துக்கு சென்றுள்ளது.