ஜனவரி 31ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடக்கம்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்கி பிப்ரவடி மாதம் 13ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் குறித்து அறிவிக்கப்பட உள்ளன.

parliament

2019ம் ஆண்டு தொடங்கி உள்ள நிலையில் ஜனவரி 31ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கப்பட உள்ளது. பிப்ரவரி மாதம் 13ம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்க உள்ளார். இதில் இடைக்கால பட்ஜெட் மற்றும் பல விவாதங்கள் எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முத்தலாக் மற்றும் பட்ஜெட் குறித்து விவாதிக்கப்படும் இந்த கூட்டத்தொட்ரில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தற்போது அறிவிக்கப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில் பல அதிரடி சலுகைகள் கிடைக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், வரி செலுத்துவதில் உள்ள சலுகைகளும் இதில் அறிவிக்கப்பட உள்ளன.

இதற்கு முன்னதாக பிப்ரவரி 1ம் தேதி இடைக்கால பட்ஜெட் அறிவிக்கப்படும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைப்பெற உள்ளதால் இது மத்திய அரசின் கடைசி கூட்டத் தொடராக இருக்கும்.