சென்னை

சென்னையில் பெட்ரோல் விலை ரூ.76.48க்கும், டீசல் விலை ரூ,68.12க்கும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

தற்போது மத்திய அரசின் ஒப்புதலுக்கிணங்க பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது.   அதனால் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது.   தற்போது கச்சா எண்ணெய் விலை உலகெங்கும் அதிகரித்துள்ளது.

அதனால்  பெட்ரோலிய பொருட்களின் ஆயத் தீர்வையை குறைக்க வேண்டும் என பல தர்ப்பினரும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தன.

ஆனால் பிப்ரவரி மாதம் அளிக்கப்பட்ட நிதி அறிக்கையில் இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.   அதனால் தற்போது தெற்கு ஆசிய நாடுகளில் இந்தியாவில் மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் அதிக விலையில் விற்கப்படுகின்றன.    மற்ற நாடுகளை விட இங்கு கிட்டத்தட்ட இருமடங்கு அதிக விலையில் விற்கப்படுகிறது.

சென்னையில் நேற்றைய விலை உயர்வுக்குப் பின் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.76.48க்கும்,  டீசல் லிட்டருக்கு ரூ. 68.12 க்கும் விற்கப்படுகின்றன.   இந்த விலையில் டீசல் விற்பது வரலாற்றிலேயே முதல் முறை ஆகும்.   பெட்ரோலின் விலை கடந்த 2014 ஆம் வருடம் ரூ. 76.93க்கு விற்கப்பட்ட போது அதை பாஜக கடுமையாக எதிர்த்தது குறிப்பிடத் தக்கது.