குவைத்: ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. இந்த நிலையில், ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக  குறைவான புள்ளிகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே உள்பட 4 அணிகள் முதல் நான்கு இடத்துக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  புள்ளி பட்டியலில் இதுபோல எப்போதும் நடந்தது இல்லை கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

ஐபிஎல் 2020 தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்து,  இன்று எலிமினேட்டர் போட்டி நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து,  அரைஇறுதிச்சுற்று போட்டி, அடுத்து இறுதிப்போட்டி என 3 போட்டிகள் மட்டுமே உள்ளது.  இந்த  நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாத  மூன்று அணிகள் 12 புள்ளிகளை பெற்றும், முதல் 4  இடங்களுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நடப்பாண்டு  ஐபிஎல் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்று ஆடின. இதுவரை  லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், மும்பை, டெல்லி, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகள் முதல் 4 இடத்தை பெற்று,  பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

இதில் மும்பை இந்தியன்ஸ் அணி  18 புள்ளிகளுடனும்,  டெல்லி கேபிட்டன் அணி 16 புள்ளிகளையும் பெற்றுள்ளது.  அதைத்தொடர்ந்து,  பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத்அணிகள் தலா 14 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இந்த நான்கு அணிகளும் முதல் 4 இடங்களை பிடித்துள்ளது.

அதுபோல,  கடைசி நான்கு  இடங்களை கொல்கத்தா, பஞ்சாப், சென்னை, ராஜஸ்தான் அணிகள் பிடித்துள்ளன.

இதில்  கொல்கத்தா 14 புள்ளிகளுடனும், பஞ்சாப், சென்னை, ராஜஸ்தான் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் லீக் சுற்றை முடித்துள்ளது. ஆனால், பஞ்சாப், சென்னை, ராஜஸ்தான் இந்த 3 அணிகள்  குறைவான புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் 4 இடங்களை பிடிக்க முடியாமல் கோட்டைவிட்டுள்ளது. இது ஐபிஎல் வரலாற்றிலேயே முதன்முறை என்றும், இதுவரை இதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டது இல்லை, ஐபிஎல் வரலாற்றிலேயே இதுபோல அனைத்து அணிகளும் 12 புள்ளிகளுக்கு மேல் எடுத்தது இல்லை என்று  கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த அணிகள்  ஓரிரு போட்டிகளில், அவர்களது  வெற்றி தோல்விகள் மாறியிருந்திருந்தாலும் இந்த பிளே ஆஃப்  சுற்றில்  மாற்றம் ஏற்பட்டு,  போட்டியின் போக்கே மாறியிருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.