புதுடெல்லி:
ந்தியாவில் மேலும் 1.52 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை முதல் முறையாக 11 லட்சத்தைக் கடந்தது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கொரோனா மீட்புக்காக 11 லட்சத்து 8 ஆயிரத்து 87 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த பாதிப்பில் 8.29 சதவீதம் ஆகும்.

தொடர்ந்து 32 நாளாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதிதான் மிகக்குறைந்த எண்ணிக்கையாக 1 லட்சத்து 35 ஆயிரத்து 926 பேர் சிகிச்சையில் இருந்தனர்.

தொற்று பரவல் அதிகரிக்கும் வேளையில் பரிசோதனைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 14 லட்சத்து 12 ஆயிரத்து 47 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறுகிறது.

கொரோனா வைரசின் 2-வது அலை எப்போது கட்டுக்குள் வரும் என்பதுதான் இப்போது நாடெங்கும் எதிரொலிக்கும் கேள்வியாக அமைந்துள்ளது.