தமிழக மக்களின் உரிமைக்காக, மத்திய மந்திரி பதவியை துறந்தவர் வாழப்பாடியார்!:  திருநாவுக்கரசர் புகழாரம்

வாழப்பாடியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் திருநாவுக்கரசர்
வாழப்பாடியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் திருநாவுக்கரசர்

சென்னை:

“தமிழக மக்களின் உரிமைக்காக மத்திய மந்திரி பதவியை துறந்தவர் வாழப்பாடியார்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் பொறுப்பு வகித்த வாழப்பாடி ராமமூர்த்தியின் நினைவுதினமான இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்.

செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் பேசியபோது
செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் பேசியபோது

அப்போது அவர், “தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக, தமிழக விவசாயிகள் நலனுக்காக அவர்களது நலனை காப்பதற்காக, மத்திய அமைச்சர் பதவியை துச்சமென மதித்து தூக்கி எறிந்த பெருந்தகையாளர் வாழப்பாடியார் அவர்கள்.

தொண்டர்களோடு தமிழ்நாடு முழுதும் சுற்றிவந்து நெருக்கமான அன்பையும் தொடர்பையும் ஏற்படுத்திக்கொண்டு காங்கிரஸ் தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர்.

இப்படி கட்சியிலும் ஆட்சியிலும் அரும்பணி ஆற்றிய வாழப்பாடியார் அவர்களின் புகழ், வாழ்க, வாழ்க!” என்று புகழாரம் சூட்டினார் திருநாவுக்கரசர்.

 

கார்ட்டூன் கேலரி