இளம் பெண்களின் நலனுக்காக திரையுலகை சுத்தப்படுத்துகிறோம் : ரேவதி

ர்ணாகுளம்
ளம் பெண்களின் நலனுக்காக நாங்கள் திரை உலகை சுத்தப்படுத்த நினைக்கிறோம் என நடிகை ரேவதி தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் புகழ்பெற்ற மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அதற்கு ஆதரவாக மலையாள நடிகர் சங்கத்தின் அணிகளில் ஒன்றான மகளிர் திரை உலக அணி செயல்பட்டது. அந்த அணியின் வற்புறுத்தலால் இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக கைதான நடிகர் திலிப் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். அவர் ஜாமீனில் வந்த பிறகு மீண்டும் சங்கத்தில் இணைக்க நடந்த முயற்சிக்கு மகளிர் அணி எதிர்ப்பு தெரிவித்தது. அதை ஒட்டி மூன்று நடிகைகள் சங்கத்தை விட்டு விலகுவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் எர்ணாகுளம் பத்திரிகையாளர் சங்கத்தில் மகளிர் திரை உலக அணியினரின் கூட்டம் நடந்தது. இதில் பிரபல தமிழ் மற்றும் மலையாள மூத்த நடிகையான ரேவதி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில், “என் பெயர் ரேவதி. நான் திரை உலகில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறேன். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். இதில் 45 படங்கள் மலையாளப் படங்கள் ஆகும்.”என அறிமுகம் செய்துக் கொண்டார். அதே போல் மற்ற நடிகைகளான பார்வதி மற்றும் பத்மப்ரியாவும் அறிமுகம் செய்துக் கொண்டனர். இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

அதன் பிறகு ரேவதி, “நாங்கள் எங்களை அறிமுகப்படுத்திக் கொள்வது ஏன் என தெரியுமா? அம்மா சங்க தலைவர் மோகன்லால் அவரை சந்தித்த எங்கள் அமைப்பின் பிரதிநிதிகளை மூன்று நடிகைகள் என குறிப்பிட்டுள்ளார். எங்களுக்கு என ஒரு பெயர் உண்டு என்பதே அவருக்கு இன்னும் தெரியவில்லை. அதனால் நாங்கள் எங்களை அறிமுகம் செய்துக் கொள்கிறோம்.

மலையாள திரையுலகைப் பற்றி #மீடூ போடுவதென்றால் ஏராளமான நிகழ்வுகள் உண்டு. இந்த மகளிர் அணி ஆரம்பித்ததற்கு அதுவும் ஒரு பின்னணி ஆகும். செய்தியாளர்கள் எங்களிடம் அவர்கள் யார் என பெயரை கேட்கிறார்கள். இப்போது அதை நாங்கள் தெரிவிக்கவில்லை எனினும் இளைய தலைமுறையினர் நிச்சயம் தெரிவிப்பார்கள்.

இனி இந்த திரையுலகுக்கு வரும் இளைய தலைமுறையினர் பாதுகாப்புடன் இருந்தாக வேண்டும். ஆகவே நாங்கள் இந்த திரையுலகை சுத்தம் செய்ய எண்ணுகிறோம். ஒரு நாள் எனது தோழிகளின் மகளோ அல்லது எனது மகளோ கூட திரைத்துரைக்கு வரலாம். அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் திரையுலகை சுத்தம் செய்கிறோம்.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒரு இளம்பெண் நடு இரவில் எனது கதவைத் தட்டி தன்னைக் காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டார். இது அனைவருக்கும் நிகழ்வது இல்லை. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணுக்கு நடந்த பாலியல் கொடுமை குறித்து நாம் என்ன செய்துள்ளோம்? நாம் அவர் பெயரை சொல்வதில்லை. அவர் புகைப்படத்தை உபயோகிப்பது இல்லை. மொத்தத்தில் ஒரு கண்ணுக்கு தெரியாத சுவரின் மறைவில் அவரை வைத்துள்ளோம்.

இது ஆரோக்யமான விஷயம் இல்லை. இந்த திரைக் குடும்பம் மகிழ்ச்சியான குடும்பமாக இல்லை. இனி மகளிர் திரையுலக அணி மௌனமாக இருக்காது. ஏற்கனவே நாங்கள் நிறைய அமைதி காத்து விட்டோம். எங்கள் சக நடிகர்கள் வாக்குறுதி மேல் வாக்குறுதி கொடுத்து விட்டு எதையும் நிரைவேற்றவில்லை. நாங்கள் இப்போது இணைந்து அவர்கள்