சென்னை: நாடுமுழுவதும ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக கேஸ் சிலிண்டரின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது மேலும் ரூ.25 உயர்த்திருப்ப தன் மூலம் இந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. .100 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் பொதுமக்களின் வயிற்றில் பாலை வார்ப்பதற்கு பதிலாக தீயை வளர்த்துள்ளது. 

தற்போது சென்னையில் சிலிண்டர் விலை 3 ஆம் முறையாக ரூ.25 விலை உயர்ந்து ஒரு சிலிண்டரின் விலை ரூ.785லிருந்து ரூ.810 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

எண்ணைப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மட்டுமின்றி சமையல் எரிவாயு விலையும் அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகிறது.

கொரோனா காலக்கட்டமான 2020ம் ஆண்டு சில மாதங்கள் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படாமல் இருந்து வந்த நிலையில், பின்னர் தொடர்ந்து உயரத் தொடங்கியது.  2020, ஜனவரி ஒன்றாம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் ஒன்றின் விலை 734 ரூபாயாக இருந்தது பின்னர் விலை உயர்த்தப்பட்டு 881 ரூபாயாக அதிகரித்தது.  பின்னர் கொரோனா காலக்கட்டத்தில்,  சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு வந்தது. அதிகபட்சமாக 2020ம் ஆண்டு , மே மாதத்தில் ஆண்டில் குறைந்தபட்ச விலையாக ஒரு சிலிண்டரின் விலை 569 ரூபாய் 50 காசாக விற்கப்பட்டது.

ஆனால், கொரோனா பரவல் குறையத்தொடங்கியதும், தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், மீண்டும் விலை உயர்த்தும் நடவடிக்கை தொடர்ந்து. 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம்   சிலிண்டர் ஒன்றின் விலை 610 ரூபாயாக இருந்த நிலையில், டிசம்பர் ஒன்றாம் தேதி  ரூ.50  உயர்த்தப்பட்டு  ரூ. 660க்கு  விற்பனை செய்யப்பட்டது. அதே மாதம்  15 ஆம் தேதி மானியமில்லாத சிலிண்டர் (Non-subsidized cylinder) ஒன்றின் விலை 710 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து 2021 பிப்ரவரி மாதம்  4ந்தேதி சிலிண்டர்  ஒன்றுக்கு  ரூ.25 அதிகரித்து ரூ.735ஆக நிர்ணயிக்கப்பட்டது.  இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,  அதை கண்டுகொள்ளாத மத்திய மாநில அரசுகள், பிப்ரவரி 15-யில் மேலும் ரூ.50 அதிகரித்து 785ஆக விற்பனை செய்தது. இந்த நிலையில், பிப்ரவரி 25ந்தேதியான இன்றுமேலும் ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளதுஅதன்படி தற்போதைய விலை ரூ.810 ஆக  உயர்த்தப்பட்டுள்ளது.

மோடி அரசின் எதேச்சதிகாரப் போக்கால், கொரோனாவால் முடங்கிய மக்களின் வாழ்வாதாரம் இன்னும் முழுமையாக மீண்டு வராத நிலையில், சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலைகளை தொடர்ந்து உயர்த்தி வருவது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாட்னாவில், மானியமில்லாத சிலிண்டர்களின் விலை (14.2 கிலோ) ரூ .892.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, இது முன்பு ரூ .867.50 ஆக இருந்தது. அதன் விலை மூன்று மாதங்களில் ரூ .200 அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில், 19 கிலோ வணிக எரிவாயு சிலிண்டரின் விலை நான்கு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.  முன்னதாக இதன் விலை 1709.50 ரூபாய். புதிய விலை இன்று (வியாழக்கிழமை) முதல் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது..