முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு ரூ.100 அபராதம்… கரூர் ஆட்சியர் அதிரடி

கரூர்:

மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் பொதுமக்களுக்கு  ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 303 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 243 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 60 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அறிவித்து உள்ளார்.

மேலும்,  சமூகவிலகலைக் கடைபிடிக்காத நிறுவனங்கள், கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தள்ளார்.