ஃபோர்ப்ஸ் 2019ம் ஆண்டில் அதிகம் சம்பாதித்த இந்திய பிரபலங்கள் 100 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 1.10.2018 முதல் 30. 09.2019 வரை பிரபலங்கள் சம்பாதித்ததை தான் கணக்கில் எடுத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

ரூ. 257. 72 கோடி வருமானத்துடன் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி முதலிடத்தில் உள்ளார்.

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு இரண்டாவது இடமும், சல்மான் கானுக்கு மூன்றாவது இடமும், அமிதாப் பச்சனுக்கு 4வது இடமும், கிரிக்கெட் வீரர் தோனிக்கு 5வது இடமும், ஷாருக்கானுக்கு 6வது இடமும் கிடைத்துள்ளது.

பாலிவுட் நடிகைகள் ஆலியா பட் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் முதல் பத்து இடங்களில் வந்துள்ளனர்.

13வது இடத்தை ரஜினிகாந்த் பிடித்துள்ளார். அவரின் வருமானம் ரூ. 100 கோடி ஆகும். ரூ. 94.8 கோடி வருமானத்துடன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் 16வது இடத்தில் உள்ளார். இயக்குநர் ஷங்கர் 55வது இடத்திலும், கமல் ஹாஸன் 56வது இடத்திலும், தனுஷ் 64வது இடத்திலும், இயக்குநர்கள் சிவா 80வது இடத்திலும், கார்த்திக் சுப்புராஜ் 84வது இடத்திலும் உள்ளனர்.

மலையாள நடிகர் மோகன்லால் ரூ. 64.5 கோடி வருமானத்துடன் 27வது இடத்திலும், ரூ. 35 கோடியுடன் பிரபாஸ் 44வது இடத்திலும், ரூ. 30 கோடியுடன் விஜய் 47வது இடத்திலும் உள்ளனர். அஜித் 52வது இடத்தை பிடித்துள்ளார்.