அடுத்த 2 தினங்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை

டுத்த இரு தினங்களுக்குத் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடும் கோடையில் தவித்துக் கொண்டிருந்த தமிழகத்தில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. மக்கள் இதனால் நிம்மதி அடைந்துள்ளனர். சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேட்டூர்-6 செ.மீ, சத்தியமங்கலம்-5 செ.மீ, ஏற்காட்டில்- 4  செ.மீ மழை பதிவாகியுள்ளது.

அத்துடன் கோவை மாவட்டம் சின்னக்கல்லார், கிருஷ்ணகிரி  மாவட்டம் பெனுகொண்டாபுரம், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் உள்ளிட்ட இடங்களில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதைப்போல் திருவாரூர் மாவட்டம் கொடை வாசல், மன்னார்குடி, சேலம் மாவட்டம் வாழப்பாடி, திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், நாகை தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 – 55 கி.மீ வேகத்தில் காற்று வீசி  வருவதால் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ஒரிசா அருகே உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் வெப்பச் சலனம் காரணமாகத் தமிழகத்தில் லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை வேளைகளில் நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யலாம்” எனத் தெரிவித்துள்ளது.

You may have missed