பிரக்ஸிட் என்று அழைக்கப்படும் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவு குறித்து பிரிட்டனுடன் நெருக்கமாக பணியாற்றிக்கொண்டிருந்த ஐரோப்பிய யூனியன் மற்றும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்களின் ஆலோசனைகளை புறக்கணித்து வருவதாக அங்கு சர்ச்சை கிளம்பியுள்ளது.

brexit

இதுகுறித்து ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த கல்வியாளர்களும் ஆலோசகர்களும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். டென்மார்க்கை சேர்ந்த சாரா ஹாக்மென் பிரிட்டன் அரசு முன்பு என்னிடம் ஆலோசனை பெற்று வந்தது. இப்போது நானும் எனது மற்ற பல நண்பர்களும் பிரிட்டன் குடிமக்கள் இல்லை என்ற காரணத்தால் ஒதுக்கப்பட்டிருக்கிறோம் என்று தனது ஆதங்கத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

brexit1

லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் என்ற அமைப்பு இது பற்றி கருத்து தெரிவித்தபோது எங்களது ஆலோசனைகளை அரசு தொடர்ந்து பெற்றுவந்திருக்கிறது. எங்களிடம் உள்ள பிரிட்டன் குடிமக்கள் அல்லாத நிபுணர்களும் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனுடன் நல்லுறவை துண்டிக்க விரும்பிய சமயங்களிலும்கூட எந்த விருப்பு வெறுப்புமின்றி தங்கள் ஆலோசனைகளை கொடுத்து பிரிட்டனின் வளர்ச்சிக்கு அரிய பங்காற்றியுள்ளனர் என்று கூறியிருக்கிறது.
பிரிட்டனின் வெளியுறவு அலுவலகம் இது பற்றி அளித்துள்ள செய்தியில் நாங்கள் வெளிநாட்டு அறிஞர்களின் கருத்தை புறக்கணிப்பதாக வந்த செய்தி தவறானது. நாங்கள் எப்போதும்போல ஐரோப்பிய யூனியனின் அறிஞர்களுடனும் இணைந்து பணியாற்றிக்கொண்டுதான் இருக்கிறோம். பிரக்ஸிட் எங்களது இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று குறிப்பிட்டுள்ளது.
பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் சேர்ந்தவுடன் உறுப்பு நாடுகளின் குடிமக்கள் பிரிட்டனில் அதிகம் குடியேறி அந்நாட்டு குடிகளின் வேலைகளை ஆக்கிரமித்ததால் பிரிட்டன் குடிமக்கள் கடும் எரிச்சலடைந்துள்ளனர். எனவே அவர்களை சாந்தப்படுத்த பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறியதுடன் வெளிநாட்டினரை வேலைக்கு எடுப்பது மற்றும் பிரிட்டனில் வெளிநாட்டினர் வந்து தங்கி படிப்பது போன்ற விஷயங்களில் கடும் கட்டுப்பாடுகளை முன்னெடுக்க துவங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.