டில்லி

ந்தியாவுக்கு வரும் பெண்களுக்குப் பாதுகாப்புடன் இருக்க இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

சமீபகாலமாக இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள், பலாத்காரம் போன்ற குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.  இதனால் உள்நாட்டில் மட்டுமின்றி வெளி நாட்டிலும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இந்தியா உள்ளதாகக்  கூறப்பட்டு வருகிறது.   எனவே இந்தியாவுக்கு வரும பெண் பயணிகளுக்கு வெளிநாட்டு அரசுகள் எச்சரிக்கை அளிக்கிறது.

இங்கிலாந்து நாட்டு அரசின் இணைய தளத்தில் இந்திய நாட்டுக்கு வரும்  பெண்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.   அத்துடன் இந்தியா வரும் பெண்களுக்கு பாலியல் குற்றம் இழைக்கப்பட்டால் அவர்கள் காவல்துறையிடம் இருந்து இது குறித்ஹ்டு அறிக்கை பெறவேண்டும் என கூறப்பட்டுள்ளது.   அந்த அறிக்கை ஆங்கிலத்தில் இல்லை என்றால் அது குறித்து ஆங்கிலத்தில் விளக்கம் கேட்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

லண்டன்  பல்கலைக்கழக கல்லூரி விரிவுரையாளர் கார்த்திகேய திரிபாதி, “இங்கிலாந்து பெண்கள் இந்தியாவில் பாலியல் கொடுமை மற்றும் வன்முறைத் தாக்குதலில்  பாதிப்படையும் போது பெண் காவல்துராஇ அதிகாரிகள் மட்டுமே இந்த விவகாரத்தைக் கையாள வேண்டும். இந்த சட்டம் பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை” எனக் கூறி உள்ளார்.

அமெரிக்க சுற்றுலாத்துறை இந்தியாவில் உள்ள பல இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு இரண்டாம் நிலையில் உள்ளதாக அறிவுரை அளித்துள்ளது.   இதனால் இந்தியாவுக்குப் பயணம் செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் பயணம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவில் தற்போது பலாத்காரம், பெண்கள் மீது பாலியல் சீண்டல், வன்முறைகள் பல சுற்றுலா நகரங்களில் நடந்து வருவதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.