ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளா்ச்சி பணிகள் குறித்து வெளிநாட்டு தூதர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீா் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 2019ம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. பின்னர் ஜம்மு காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

வளா்ச்சியை கருத்தில் கொண்டு ஜம்மு காஷ்மீா், யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதாக மத்திய அரசு கூறியது.  இதையடுத்து, அங்குள்ள  நிலவரத்தை அமெரிக்கா, தென் கொரியா, பிரேசில் உள்ளிட்ட 17 நாடுகளை சோ்ந்த தூதா்கள் கடந்தாண்டு ஆய்வு செய்தனா்.

ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தல் அண்மையில் முடிந்த நிலையில், தோ்தலுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சி நடவடிக்கைகள் குறித்து மீண்டும் வெளிநாட்டு குழுவினர் இன்று முதல் 2 நாள் ஆய்வை தொடங்கி உள்ளனர்.