வெளிநாடு வாழ் தென்னிந்தியர்களால் அந்நிய செலாவனி அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி தகவல்

தென் மாநிலங்களிலிருந்து வெளிநாடு சென்று வேலை செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், உலகமெங்கும் வாழும் தென்னிந்திய மக்களால் 2017ம் ஆண்டு இந்தியா பெறப்பட்ட அந்நிய செலவாணியின் மதிப்பு சுமார் 69 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும், இதன் காரணமாக அந்நியா செலாவனி அதிகரித்து வருவதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் 2017ம் ஆண்டிற்கான அறிக்கையில் வெளியிடப்பட்ட தகவலின் படி, கடந்த 2017ம் ஆண்டில் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, மற்றும் ஆந்திரா மாநிலங்கள் பெற்ற பணத்தின் பங்கு 58.7% ஆகும். இந்த நான்கு மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே சுமார் 2,30,900 கோடி ரூபாய் பணத்தினை தங்களின் வீடுகளுக்கு அனுப்பியுள்ளனர் என்று குறிப்பிடப்பட் டிருக்கிறது.

இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்த கேரளா 19% அன்னிய செலவாணி ஈட்டித் தந்துள்ளது. அதனைத் தொடர்ந்து மகாராஷ்ட்ரா மாநிலம் 16.7% பெற்று சுமார் 11.52 பில்லியன் டாலர்களை வெளிநாடுகளில் இருந்து பெற்றிருக்கிறது. கர்நாடகாவிற்கு 10.35 பில்லியன் அமெரிக்க டாலர்களை அம்மாநிலத்தில் இருந்து வெளிநாடுகளில் வசிக்கும் மக்கள் அனுப்பியுள்ளனர்.

கடந்த ஆண்டு வெளிநாட்டு வாழ் ஊழியர்களால் அவரவர் தாய் நாட்டிற்கு அனுப்பப்பட்ட பணத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்ட கணக்கெடுப்பில் தொடர்ந்து இந்தியா முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை அடுத்து சீனா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் கணக்கெடுப்பின்படி, 82 சதவீதம் மதிப்பிலான பணம் ஐக்கிய நாடுகள் அமீரகம், சௌதி அரேபியா, கத்தார், குவைத், அமெரிக்கா, இங்கிலாந்து, ஓமன் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் இருந்து தான் பெறப்பட்டது.

வங்கிகளிலிருந்து பெறப்பட்ட தகவலின்படி, வெளிநாடு வாழ் இந்தியா மக்களிடமிருந்து வரும் பணம் இங்கு குடும்ப தேவைகளுக்காகவும் சொத்து முதலீடுகளுக்காவும் பயன்படுத்தப்படுகிறது.