மும்பை:

யோகா சாமியார் ராம்தேவ் நடத்தும் பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனத்தில் பிரஞ்ச் நிறுவனம் ரூ. 3 ஆயிரம் கோடியை முதலீடு செய்கிறது.

இது குறித்து பதஞ்சலி நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா கூறுகையில், ‘‘நிறுவனத்தின் மேம்பாட்டிற்கு வெளிநாட்டு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு வெளிநாட்டு நிதியை பயன்படுத்துவதில் தயக்கம் எதுவும் இல்லை. ஆனால், அந்த நிதியை நாங்களே முழுமையாக கொண்டு செலவிடுவோம். இதற்காக அந்நிறுவனத்துக்கு பங்குகள் எதுவும் வழங்கப்படமாட்டாது’’ என்றார்.

எல்விஎம்ஹெச் மோயட் ஹெனஸி&லூயிஸ் வுயிட்டன் என்ற பிரஞ்ச் நிறுவனம் தான்500 மில்லியன் டாலர் அதாவது 3 ஆயிரத்து 250 கோடி ரூபாயை பதஞ்சலி நிறுவனத்தில் முதலீடு செய்கிறது. இந்நிறுவனம் பேஷன் மற்றும் கூலிங் கிளாஸ், தோல் பொருட்கள், வாட்ச், ஷூ போன்ற சொகுசு அணிகலன்களை உலகளவில் விற்பனை செய்து வருகிறது.