டில்லி:

வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்திய நீதிமன்றங்களில் வாதாட தடை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

மேலும், வெளிநாட்டு வழக்கறிஞர்கள் தகுந்த ஆலோசனைகளை மட்டுமே வழங்கலாம் எனவும் உத்தரவில் கூறி உள்ளது.

இந்­தி­யா­வில், வெளி­நாட்டு சட்ட நிறு­வ­னங்­களை அனு­ம­திப்­பது குறித்து, மத்­திய அரசு பரி­சீ­லித்து வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்த்துள்ள நிலையில், உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்நிலையில இது தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு அளித்து உள்ளது.

அதில், இந்திய நீதிமன்றங்களில் வெளிநாட்டு வழக்கறிஞர்கள்  வாதாட தடை விதிக்கப்படுவதாகவும், வெளி நாட்டு சட்ட நிறுவனங்கள் இந்தியாவில் அலுவலகங்களை அமைக்கவோ அல்லது நடைமுறைப்படுத்தவோ முடியாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்திய வாடிக்கையாளர்களுக்கு அவர்கள்  தற்காலிக அடிப்படையில் ஆலோசனைகளை மட்டுமே பறந்து வந்து கூறிவிட்டு பறந்து சென்றுவிட வேண்டும் என்றும் கூறி உள்ளது.

மேலும், கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி 21ந்தேதி  சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய  தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த 2012ம்  ஆண்டு சென்னை உயர்நீதி மன்றம், இந்­திய வழக்­க­றி­ஞர்­கள் சட்­டத்­தில், வெளி­நாட்டு நிறு­வ­னங்­கள், இந்­தி­யா­வில் சட்ட சேவை வழங்க முடி­யாது. சர்­வ­தேச வழக்­கு­கள் தொடர்­பாக, வெளி­நாட்டு வழக்­க­றி­ஞர்­கள் சட்ட ஆலோ­சனை மட்டுமே வழங்கலாம் என்றும் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.