வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் தாயார் மரணம்!

புதுடெல்லி: மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் தாயார் சுலோச்சனா சுப்ரமணியம், இன்று(சனிக்கிழமை) இயற்கை எய்தினார்.

இதனை டுவிட்டரில் தெரிவித்துள்ளார் தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்ட அமைச்சர் ஜெய்சங்கர்.

“எனது தாயார் சுலோச்சனா சுப்ரமணியம், இன்று இயற்கை எய்தினார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் நண்பர்கள் மற்றும்  நலம் விரும்பிகள், தங்களுடைய எண்ணங்களில் அவரை வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அவர் உடல்நலன் குன்றியிருந்தபோது, அவருக்கு உதவிகரமாக இருந்த அனைவருக்கும் எங்களின் குடும்பம் நன்றி செலுத்துகிறது” என்று டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் ஜெய்சங்கர்.