பக்ரைன் சென்றார் சுஷ்மா சுவராஜ்….தூதரக கட்டிடத்தை திறந்து வைக்கிறார்

மனாமா:

2 நாள் அரசு முறை பயணமாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பக்ரைன் வந்தடைந்தார். பக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் சேக் காலித் பின் அகமது பின் முகமது அல் கலிஃபாவுடனான அவர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

இருநாட்டு உறவுகள் குறித்தும், பொருளாதாரம், பாதுகாப்பு, கலாச்சார உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது. பக்ரைனில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய தூதரக கட்டிடத்தை சுஷ்மா சுவராஜ் திறந்துவைக்க உள்ளார்.