29.2.2020 அன்று வடபழனி ஆண்டவர் கோவிலில் நடந்த கந்தன் கருணையின் அதிசயம்!

29.2.2020 அன்று வடபழனி ஆண்டவர் கோவிலில் நடந்த கந்தன் கருணையின் அதிசயம்!

நெட்டிசன் அன்பழகன் வி அவர்களின் முக நூல் பதிவு

படத்தில் இருப்பவரின் பெயர் ஃபிலோமினா.இத்தாலியில் பிறந்தவரான இவர் தற்போது பிரான்ஸில் வசிக்கிறார்.

பிறப்பால் இவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்..

இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார்.தமிழ் நாட்டிலும் சில நாட்கள் தங்கியுள்ளார்..

அப்போது யதேச்சையாக வடபழனி முருகன் கோவிலுக்கு நண்பர்களுடன் இவரும் வந்துள்ளார்.

நீண்ட காலமாக இவருக்கு குழந்தை இல்லாததால் அப்போது யாரோ இவரிடம் வடபழனி முருகனிடம் வேண்டி கொள்ளுங்கள் உங்கள் வேண்டுதல் நடக்கும் என்று சொல்ல இவரும் அவர்கள் சொன்னது போல் முருகனிடம் வேண்டி கொண்டுள்ளார்..

அதன்பின் பிரான்ஸ் சென்றுவிட்டார்…

அடுத்த ஆண்டே இவருக்கு குழந்தை பிறந்துள்ளது..ஆனால் இவர் வேண்டிய வேண்டுதலை மறந்துவிட்டார்..

தற்போது இந்த குழந்தைக்கு மூன்று வயது ஆக போகிறது.இதற்கிடையில் முருகன் கனவில் வந்ததால் தற்போது இந்நியா வந்து தன் வேண்டுதலை மொட்டையடித்துக் கொண்டு நிறைவேற்றியுள்ளார்….

You may have missed