லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்தில் அனிருத் இசையமைத்த ‘வாத்தி கமிங்’, ‘வாத்தி ரெய்டு’, ‘குட்டி ஸ்டோரி’ உள்ளிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தற்போது இங்கிலாந்து நாட்டில் வெளிநாட்டினர் பலரும் சமூக இடைவெளியுடன் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடியுள்ளனர். முதலில் சிலர் நடனமாட, பின்பு ஒவ்வொருவராக இணைந்துள்ளனர். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலானது.


இந்த வீடியோவை இசையமைப்பாளர் அனிருத்தும் தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.