டில்லி:

ந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் மருத்துவ விசா இல்லாமலேயே,  நாட்டில் எங்கும்  சிகிச்சை பெறலாம் என்ற சலுகையை இந்திய அரசு வழங்கி உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

மருத்துவத்துறையில் சிறந்து விளங்கும் இந்தியாவுக்கு, வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இங்கு வருபவர்கள் சிகிச்சை தொடர்பாக அதிக நாட்கள் தங்கும்போது பல பிரச்சினைகள் எழுகின்றன.

இதைத் தவிர்க்கும் வகையில் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி,

இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் மருத்துவ விசா பெறாமல் நாட்டில் எங்கும்  சிகிச்சை பெறலாம்.

ஆனால்  இந்த நடைமுறை  உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு செல்லாது என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும், ஏற்கனவே இங்கு சிகிச்சை பெற்ற வெளிநாட்டவர்கள் வைத்துள்ள முதன்மை விசாவின் மூலம்  இந்தியாவில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் .

உடலில் சிறு பிரச்னை, காய்ச்சல் மூலம்  பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டவருக்கு மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சை தேவையாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் முதன்மை விசாவை வைத்து எந்த மருத்துவமனையை வேண்டுமானாலும் அணுகி சிகிச்சை பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.