மலேசியா: தகவல் தொழில்நுட்ப திறன் கொண்ட வெளிநாட்டினருக்கு குடியுரிமை….மகாதிர் முகமது

கோலாலம்பூர்:

மலேசியாவில் புதிதாக பிரதமர் பதவி ஏற்ற மகாதிர் முகமது தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த வகையில் தகவல் தொழில்நுட்ப துறையில் (ஐ.டி.) திறன் கொண்ட வெளிநாட்டினருக்கு மலேசியா அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த துறையில் தகுதியான வெளிநாட்டினருக்கு குடியிரிமை வழங்கப்படும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளது.

கோலாலம்பூரில் இன்று அமெரிக்கன் மலேசியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மகாதிர் முகமது இந்த அறிவிப்பை வெளியிட்டார். கூட்டம் முடிந்த பின்னர் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘மலேசியாவின் புதிய அரசு அமெரிக்காவுடன் வர்த்தகம் மேற்கொள்ள உறுதி கொண்டுள்ளது. இந்த வர்த்தக உறவு மேலும் வளர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

You may have missed