ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு..சுஷ்மா சுவராஜ் அப்செட்

டெல்லி:

பா.ஜ., கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை முடிவு செய்தவற்கான முக்கிய ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் மதியம் நடந்தது. இதில் மத்திய அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றனர். ஆனால் வெளியுறவுத்துறை சுஷ்மா சுவராஜ் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

வேறு பணி இருப்பதால் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கூறி சுஷ்மா புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆனால், ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் தனது பெயர் இல்லை என்பது முன்கூட்டியே சுஷ்மாவுக்கு தெரியவந்துள்ளது. இந்த வருத்தத்தில் தான் அவர் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளார்.

அவர் எண்ணிய படியே இக்கூட்டத்தில் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் வருத்தத்தில் உள்ள சுஷ்மாவை சமாதானப்படுத்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் முயற்சி செய்து வருவதாக பாஜ நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.