அதிமுகவின் முன்னாள் எம்பி திமுகவில் இணைந்தார்: ஸ்டாலின் முன்னிலையில் சேர்ப்பு

சென்னை: அதிமுக முன்னாள் எம்பியும் ஓபிஎஸ் ஆதரவாளராகவும் அறியப்பட்டவருமான லட்சுமணன் என்பவர் திமுகவில் இணைந்தார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு மாறும் தலைவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அண்மையில் சமீபத்தில் திமுகவில் இருந்து சிலர் விலகி மாற்றுக் கட்சிக்கு வந்தனர். அதே போல, அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வரும் அதிமுகவினரும் உள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு அதிமுகவில் சுகாதார துறை அமைச்சராக இருந்த விஜய், திமுகவில் இணைந்தார்.

இந் நிலையில் தற்போது திமுகவுக்கு முன்னாள் அதிமுக எம்பி ஒருவர் இணைந்துள்ளார். அதிமுக முன்னாள் எம்பியும் ஓபிஎஸ் ஆதரவாளராகவும் இருந்தவரான லட்சுமணன் என்பவர் திமுகவில் இணைந்தார்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினை  சந்தித்து லட்சுமணன், திமுக உறுப்பினர் அட்டையை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டார். கழகப் பொருளாளர் துரைமுருகன், மாவட்டச் செயலாளர் பொன்முடி, கழக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம் பொன்முடி  உடனிருந்தனர்.