முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பிரசாத் காலமானார்

சென்னை:

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பிரசாத் காலமானார். அவருக்கு வயது 67. உடல்நலமில்லாமல் சென்னை அப்போலோவில் சேர்க்கப்பட்டிருந்தவருக்கு இன்று  சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில்  மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சராக இருந்தவர் கே. பி. ராஜேந்திர பிரசாத். இவருக்கு மூளையில் ரத்தக் கட்டி நோய் காரணமாக கடந்த மாதம் 26ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குமரி மாவட்டத்தை சேர்ந்தவரான  முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பிரசாத், ஜெ மறைந்தபோது அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தின்போது, சசிகலாவை கடுமையாக சாடி, ஓபிஎஸ் அணியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி