சென்னை: சிறை தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா, சென்னையில் ஓய்வெடுத்து வரும் நிலையில், அவரை நாகர்கோவில் தொகுதி முன்னாள் எம்எல்ஏ முருகேசன் இன்று சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில்  4ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற சசிகலா தண்டனை காலம் முடிந்து விடுதலையானார். அவர் தமிழக அரசியலில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முயற்சிகளை அமமுக தலைவர் டிடிவி தினகரன் முன்னெடுத்து வருகிறார்.  சசிகலாவின் அரசியல் வருகை, அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், பாலியல் குற்றச்சாட்டு காரணமாக கடந்த 27.07.20 அன்று, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டவர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் இன்று சசிகலாவை சந்தித்துபேசினார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாஞ்சில் முருகேசன் மீது 15வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், சிறுமியின் வாக்குமூலம், அதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் கடும் எச்சரிககையைத் தொடர்ந்து காவல்துறை வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். தற்போது ஜாமினில் உள்ள பாலியல் குற்றவாளியான நாஞ்சில் முருகேசன், சொத்துக்குவிப்பு குற்றவாளியான சசிகலாவை சந்தித்து பேசியிருப்பது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.