கோவை: 

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கடந்த ஜனவரி மாதம் 25ந்தேதி கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்க கோவை நீதி மன்றம் ஜாமின் வழங்கியது. இதையடுத்து அவர் இன்று சிறையில் இருந்து வெளியே வந்தார்.

கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தி வந்ததாகவும்  எழுந்த குற்றச்சாட்டின்பேரில் முன்னாள் அதிமுக எம்.பி.யை அதிமுக தலைமை கட்சியில் இருந்து நீக்கிய நிலையில், தொடர்ந்து கட்சியினரை  விமர்சித்து வருவதாக கொடுத்த புகாரின் பேரில் அவரை கடந்த 25ந்தேதி  சூலூர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது 11 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் கோவை நீதிமன்ற உத்தரவுப்படி அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.