அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: 9 பேர் கொண்ட குழு கண்காணிப்பு

கவுகாத்தி: அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனாவால் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவரது உடல்நிலை மோசமடைய வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.

9 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறது. வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு உள்ளதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக ஆகஸ்ட்டில் கோகோய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் சிகிச்சை முடிந்து அக்டோபர் 25ம் தேதி அன்று அவர் வீடு திரும்பினார்.