மும்பை: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ்  மும்பையில் இன்று காலமானார்.

டீன் ஜோன்ஸ்,  ஐபிஎல் வர்ணனைக்காக மும்பையில் தங்கி இருந்த நிலையில், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால்,  சிகிச்சை பலனின்றி காலமானார்.

டீன் ஜோன்ஸ் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியில் இவர் 1984-1994 வரை விளையாடினார்.   52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 சதங்கள் உட்பட 3631 ரன்கள் எடுத்தார், மேலும் 164 ஒருநாள் போட்டிகளில் இடம்பெற்றார், 6063 ரன்கள், ஏழு சதங்கள் மற்றும் 46 அரைசதங்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்  டீன் ஜோன்ஸ்  இந்திய கிரிக்கெட் உலகில் இவர் முக்கிய பங்கு வகித்தார். கிரிக்கெட் வர்ணனை செய்வதில் ஆர்வம் கொண்டவரான, இவர்,இந்திய கிரிக்கெட் வீரர்கள் உடன் மிகவும் நெருக்கமாக பழகியவர்.  இந்தியாவை தன்னுடைய இரண்டாவது வீடு என்ற கூறி மெய்சிலிர்த்தவர். இவர் இந்திய அணி மீதும், இந்தியா மீதும் மதிப்பு கொண்டாவர்.

கடந்த 2005ம் ஆண்டு,  இவர் இந்திய அணிக்கு கோச் ஆக கூட முயன்றார். ஆனால், அவரது கனவு நிறைவேறாத நிலையிலும், தொடர்ந்து இந்திய அணியின் போட்டிகள் பலவற்றில் இவர் வர்ணனை செய்துள்ளார்.

தற்போது, ஐபிஎல் வர்ணனைசெய்வதற்காக இவர் மும்பையில் தங்கியிருந்தார். ஆனால்,  இன்று அவருக்கு திடீரென ஏற்பட்ட  மாரடைப்பு காரணமாக பலியானார்.

டீன் ஜோன்ஸ் மறைவுக்கு  ஐபிஎல் நிர்வாகம்   இரங்கல் தெரிவித்துள்ளது. அதில் டீன் ஜோன்ஸ் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவரின் துடிப்பான, உற்சாகமான வர்ணனையை நாங்கள் மிஸ் செயவோம். அவரின் குடும்பத்தினருக்கு எங்கள் இரங்கலை தெரிவிக்கிறோம் என்று பதிவிட்டுள்ளது.