பஞ்சாப் & மஹாராஷ்டிர கூட்டுறவு வங்கி மோசடி வழக்கு: முன்னாள் பாஜக எம்.எல்.ஏவின் மகன் கைது

பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், முன்னாள் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.வின் மகனான ரஜ்நீத் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், கணக்காளர்களான ஜயேஷ் சங்கானி மற்றும் கேதன் லக்தாவா இருவரும்,மோசடி ஏற்பட்ட போது பி.எம்.சியில் கணக்காளர்களாக பணியாற்றியதாகவும், வங்கியின் மோசடிகளை அவர்கள் மறைக்க முயற்சித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டு,கடந்த வாரம், பொருளாதார குற்ற பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை தொடர்ந்து,அவ்வங்கியின் இயக்குநரும், முன்னாள் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏவின் மகனுமான ரஜ்நீத் சிங் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.