குஜராத் மாநில பாஜ முன்னாள் எம்.பி. மனைவி மீது மருமகள் கொலை புகார்… பரபரப்பு
ராஜ்கோட்:
குஜராத் மாநில பாரதியஜனதா முன்னாள் எம்.பி.யின் மனைவி மீது, அவரது மருமகள், தன்னை கொல்ல சதி செய்கிறார் சென்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்த்ரேஷ் பட்டேல். இவரது மருமகள் திவ்யா பட்டேல், இவர் தனது மாமியார் தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாக குற்றம் சாட்டி உள்ளார்.
இதுகுறித்து ஜாம்நகர் காவல்நிலையத்தில் திவ்யா பட்டேல் புகார் மனு கொடுத்துள்ளார். அதில், தன்னை கொலை செய்ய தனது மாமியார் சதி செய்து வருவதாக பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார். இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த புகார் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாம்நகர் எஸ்பி சரத் சிங்கால், “திவ்யா பட்டேல் புகார் குறித்து என்னை தனிப்பட்ட முறையில் சந்தித்தார். தற்போது அந்த புகார் குறித்து விசாரிக்க தன்னிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் கோரி உள்ளனர். இது குடும்ப விஷயம் என்பதால் தீர விசாரித்துதான் நடவடிக்கை எடுக்க முடியும். ஏனென்றால், திவ்யாவின் கணவர், விவாகரத்து கேட்டும் மனு தாக்கல் செய்துள்ளார் என்றார்.
இதுபோன்ற காரணங்களால், திவ்யாவின் மாமியார் மீதான புகார் பதிவு செய்யவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று கூறி உள்ளார்.