கொல்கத்தா,

ச்ச நீதி மன்ற நீதிபதிகளுக்கு எதிராக பேசியதாக,  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதி கர்ணன் தனது ஆறுமாத சிறை தண்டனையை முடித்து இன்று விடுதலையானர்.

நீதிபதி கர்ணன் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக இருந்தபோது சக நீதிபதிகள் மீது ஊழல் புகார் கொடுத்திருந்தார். அதைத்தொடர்ந்து அவரை கல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவர்மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இதுகுறித்த வழக்கில் உச்சநீதி மன்றத்தில் ஆஜராகாமல், நீதிபதிகளுக்கே வாரண்ட் பிறப்பித்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன் காரணமாக நீதிபதி கர்ணன் மீது மேலும் பல வழக்குகள் பதியப்பட்டன. அதைத்தொடர்ந்து அவரை கைது செய்ய உத்தரவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து தலைமறைவான நீதிபதி கர்ணன், ஒரு மாத காலத்துக்கு பின்னர்  கோவையில் கைதுசெய்யப்பட்டு கொல்கத்தா கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள பிரபலமான பிரசிடென்ஸி சிறையில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.

அவரது தண்டனை காலம் நேற்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து, இன்று பகலில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.