முன்னாள் சிபிஐ இயக்குநர் அஷ்வானி குமார் சிம்லாவில் தற்கொலை!

சிம்லா: சிபிஐ அமைப்பின் முன்னாள் இயக்குநரும், இமாச்சலப் பிரதேச முன்னாள் டிஜிபி -யுமான அஷ்வானி குமார், சிம்லாவிலுள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவர், நாகலாந்து மாநில ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார்.

அவர் மனஅழுத்த நோயால் அவதிப்பட்டு வந்ததாக, தொடர்புடைய மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிம்லா காவல் கண்காணிப்பாளர் இதுதொடர்பாக கூறியுள்ளதாவது, “அவர் பல காவல்துறை அதிகாரிகளுக்கு முன்னுதாரணமாக இருந்தவர். அவரின் இந்த முடிவு மிகுந்த வருத்தம் தரக்கூடியது” என்றுள்ளார்.

தற்கொலைக்கு முன்னதாக குறிப்பெழுதி வைத்த அஷ்வானி குமார், “இந்த வாழ்க்கை எனக்கு அலுத்துவிட்டது. எனவே, எனது அடுத்தப் பயணத்தை துவக்குகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.