மோடியை குற்றமற்றவர் என அறிவித்தவருக்கு வெளிநாட்டு தூதர் பதவி !

டில்லி

குஜராத் கலவர வழக்கில், மோடி குற்றமற்றவர் என அறிவித்த முன்னாள் சிபிஐ இயக்குனர் ராகவன் சிப்ரஸ் நாட்டின் இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராகவன் சி பி ஐ தலைவராக 1999 முதல் 2001 வரை பணி புரிந்துள்ளார்.  குஜராத் கலவரங்களை விசாரிக்கும் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார்.  இந்த வழக்கு விசாரணை முடிவில் ராகவன் மோடியை குற்றமற்றவர் என அறிவித்தார்.  உடல்நிலை காரணமாக அவரை சிபிஐ யில் இருந்து விலக, இந்த வருடம் ஏப்ரல் மாதம் உச்ச நீதி மன்றம் அனுமதி அளித்தது.

சிப்ரஸ் நாட்டின் தூதுவராக இருந்த ரவி பன்கர் இலங்கைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் இடத்தில் ராகவன் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.  சாதாரணமாக இது போன்ற பதவிகளில் ஐ எஃப் எஸ் அதிகாரிகளையே நியமிப்பது வழக்கம்.   ஆனால் பா ஜ க பொறுப்பேற்ற பின் காவல்துறை அதிகாரிகளை இந்த பணிகளில் அமர்த்துவது அதிகரித்து வருகிறது.  சவுதி அரேபியா, ரோமானியா ஆகிய நாடுகளிலும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் தூதர்களாக இதற்கு முன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராகவன் சென்னை பல்கலைக்கழகம், பிலடெல்பியா பல்கலைக்கழகம், ஹாவர்ட் பல்கலைக்கழகம் போன்ற புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் பயின்றவர்.   பல நீதிபதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் பாராட்டையும் பெற்றவர்.  அவர் சென்னையில் பணி புரிந்த போது ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் மதிப்பீட்டாளராக பணி புரிந்தது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி